விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் பணி..!
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் வருமானத்துறையின் அலுவலகங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உள்ளன. தமிழ்நாட்டிலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அலுவலகம் உள்ளது. வருமான வரித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிட விவரம்
- சுருக்கெழுத்தர் நிலை-II (Stenographer Grade-II) - 12 இடங்கள்,
- வரி உதவியாளர் (Tax Assistant) - 47 இடங்கள்
- பன்முகப் பணியாளர் (Multi-Tasking Staff - MTS) - 38 இடங்கள்
விளையாட்டு அடிப்படையிலான காலிப்பணியிடங்கள் விவரங்கள் பின்வருமாறு
தடகளம் - 26, நீச்சல் - 06, பேட்மிண்டன் - 04, டேபிள் டென்னிஸ் - 04, செஸ் - 04, லான் டென்னிஸ் - 04, கிரிக்கெட் - 10. மேலும், கூடைப்பந்து - 04, கைப்பந்து - 05, கபடி - 07, கால்பந்து - 11, பில்லியர்ட்ஸ் - 02, ஸ்குவாஷ் - 02, யோகாசனம் - 02, பாரா விளையாட்டு (காது கேளாதோர் விளையாட்டு உட்பட) - 04, குத்துச்சண்டை - 02 என பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளுக்கும் பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
சுருக்கெழுத்தர் நிலை-II பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரி உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பன்முகப் பணியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி போதுமானது. விளையாட்டுத் தகுதி கொண்ட பணிக்கு, ஜூலை 01, 2026 அன்று வரையிலான விளையாட்டுச் சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொருத்தவரை, ஜனவரி 31, 2026 தேதிப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
சுருக்கெழுத்தர் மற்றும் வரி உதவியாளர் பதவிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பன்முகப் பணியாளர் பதவிக்கு 18 முதல் 25 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு :
சுருக்கெழுத்தர் நிலை-II - ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
வரி உதவியாளர் - ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
பன்முகப் பணியாளர் - ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம்
தேர்வு முறையை பொறுத்தவரை தகுதிப் பட்டியல், விளையாட்டுத் தகுதி, திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு படி தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometaxmumbai.gov.in/ சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.incometaxmumbai.gov.in/wp-content/uploads/2026/01/Sports-Recruitment-Notification.pdf


