அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க ஜன. 20 கடைசி தேதி..

 
அண்ணா பல்கலை

சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்த்தில் 7 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 அண்ணா பல்கலைக்கழகத்தின்  தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் அமைந்துள்ளது.  துணை அலுவலகம் குரோம்பேட்டையில் உள்ளது.  இந்த பல்கலைக்கழகத்தின் அலுவலக பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி விண்ணப்பத் திட்டமிடல், வன்பொருள் பொறியாளர், நெட்வொர்க் பொறியாளர், எழுத்தர் உதவியாளர், தொழில்முறை உதவியாளர்  I மற்றும் II ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அண்ணா

வேலையின் பெயர் :  விண்ணப்பத் திட்டமிடல் (Application Programme ) , வன்பொருள் பொறியாளர் (Hardware Engineer) ,நெட்வொர்க் பொறியாளர் (Network Engineer), எழுத்தர் உதவியாளர் (Clerical Assistant), தொழில்முறை உதவியாளர்  I மற்றும் II (Professional Assistant – I and II )

மொத்த பணியிடங்கள் :  07 காலிப் பணியிடங்கள்

தேர்வு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு ( Written Exam ) மற்றும்  நேர்காணல் ( Interview )

கல்வித்தகுதி :  B.E/ B.Tech/ MCA/ MBA/ M.Sc/Any Degree

வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க ஆரம்ப / கடைசி தேதி : 05.01.2022 முதல் 20.01.2022 வரை

விண்ணப்பிக்கும்  முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் (Online)

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும். மேலும் விவரங்களை  www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறியலாம்.