ரூ.1,00,000 சம்பளத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறையில் வேலை; 6 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க முழு விவரம்..!

 
1 1

தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பதவியின் பெயர்                                           காலிப்பணியிடங்கள்
நிறுவன செயலாளர் (ACS/FCS)                                   2
இடைநிலை நிறுவன செயலாளர் (CS)                     4
மொத்தம்                                                                          6

வயது வரம்பு

  • நிறுவன செயலாளர் பதவிக்கு 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.
  • இடைநிலை தகுதிப் பெற்றவர்கள் ஜனவரி 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 22 வயது இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
  • இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும். மேலும் நிறுவன செயலாளர் தகுதிப் பெற்று, இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தில் (ICSI) உறுப்பினர் தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
  • நிறுவன செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், வரிசைப்படுத்தப்பட்ட நிறுவனத்தில் வாரியம், செபி, பங்குச் சந்தை ஆகியவற்றில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • இடைநிலை நிறுவன செயலாளர் பதவிக்கு டிகிரியுடன் ICSI இடைநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு அனுபவம் குறித்து அறிவிப்பில் இடம்பெறவில்லை.
  • மின்சாரத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
  • நிறுவன செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 1,00,000 சம்பளமாக வழங்கப்படும்.
  • இடைநிலை தகுதிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்தத்துடன் நிரப்பப்படுகிறது. முதலில் 1 வருடத்திற்கும், தேவைக்கு ஏற்ப 2 வருடங்கள் வரை நீட்டிக்கப்படும்.

எனவே, விண்ணப்பிக்கும் நபர்கள் குறிப்பிட்ட தகுதி மற்றும் அனுபவத்திற்கு உட்பட்டு இருக்கும்பட்சம் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு மின்சார விநியோக கழகத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் https://www.tnpdcl.org/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம், உரிய ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து தலைமை பொறியாளரை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.


விண்ணப்பத்தில் சுயவிவரங்கள், தொடர்பு விவரங்கள், கல்வி, அனுபவம் மற்றும் கடைசியாக பெற்ற சம்பளம் உள்ளிட்ட விவரங்களுடன் புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட வேண்டும். அனைத்து கல்வி மற்றும் அனுபவம் சார்ந்த சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.


முகவரி
தலைமை பொறியாளர்,
தமிழ்நாடு மின் விநியோக கழகம்,
எண்.144, அண்ணா சாலை,
சென்னை - 600 002.

முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025

தமிழ்நாடு மின்சாரத்துறையில் கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு தகுந்த தகுதி உள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் உடனே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இப்பணி குறித்து முடிவெடுக்க அனைத்து உரிமமும் வாரியத்திற்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.