இன்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தென்காசி, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் வேலைவாப்பு முகாம்..!

 
1

பெரம்பலூர் மாவட்டத்தில் 08,03,2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி), தண்ணீர்பந்தல், பெரம்பலூர் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. மேலும் சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழில் உருவாக்கும் திட்டம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறை வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10000/- முதல் 20000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியாக 8ஆம் வகுப்பு முதல் 10,12 ஆம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி) பட்டயப்படிப்பு (Diploma) தொழிற்கல்வி (ITI) மற்றும் பட்டப்படிப்பு (Any Degree) பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 08.03.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை சாலை, கிருஷ்ணகிரி வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்,  5,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கி கடன் குறித்த வழிகாட்டப்படவுள்ளது. 

கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ஐ.டி.ஐ./டிப்ளமோ/நர்சிங் பார்மஸி/பொறியியல், மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கிருஷ்ணகிரி

தென்காசி மாவட்டத்தில் 08.03.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சி, தென்காசி. வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 3,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது, சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விளக்கப்படும். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில்  18 வயது முதல் 35 வயது உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.  எட்டாம் வகுப்புகள் முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ./ டிப்ளமோ/ நர்சிங்/பொறியியல்/ஆசிரியர்கள் பங்கேற்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் 08,03,2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி பிங்கர் போஸ்ட் உதகை வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள், நீலகிரி,  கோவை திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 

கல்வித்தகுதிகள்

8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ஐ.டி.ஐ./டிப்ளமோ/நர்சிங் பார்மஸி/பொறியியல்

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம், நீலகிரி மாவட்டம், 0423-2444004, 7200019666

புதுக்கோட்டை மாவட்டத்தில் 08.03.2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதில் 10,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் தேர்வு செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு  அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதிகள்

* 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ஐ.டி.ஐ./டிப்ளமோ/நர்சிங் பார்மஸி/பொறியியல்

அனுமதி இலவசம்

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை