கூகுள் பேவிற்கு போட்டியாக களமிறங்கிய ஜியோ ஃபைனான்ஸ் ஆப்

 
jio

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ, தற்போது புது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளது.

Jio Financial Services launches 'JioFinance' app in beta version

போன்பே, கூகுள் பேவுக்கு போட்டியாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், "ஜியோ ஃபைனான்ஸ் ஆப்" என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் வங்கி சேவைகள் போன்ற சேவைகளை பெறலாம். அதாவது ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் டிஜிட்டல் வங்கி கணக்கை திறக்க முடியும்.

Image


"ஜியோ ஃபைனான்ஸ் ஆப்" மூலம் டிஜிட்டல் வங்கி சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், பில் செலுத்துதல், காப்பீட்டு ஆலோசனை போன்றவற்றை பெறலாம். மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான கடன் வசதிகளையும் இந்த செயலி மூலம் பெறலாம். இந்த செயலி அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.