நகை பிரியர்கள் ஷாக்..!! 2. நாட்களாக குறைந்து இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...!!
Feb 14, 2026, 09:49 IST1771042759662
உலகளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ. 57 ஆயிரமாக இருந்த சவரன் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதற்கு சர்வதேச அளவிலான போர் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
கடந்த மாதத்தில் அமெரிக்க - கிரீன்லாந்து போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனிமேல் விலையேற்றம் இதேபோன்றுதான் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித மாற்றங்கள் காரணமாக, தங்கம் விலை சமீப நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹3,120 குறைந்த தங்கம், காதலர் தினமான இன்று மீண்டும் உயரத் தொடங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை அதிகரிப்பதால் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (பிப்.14) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 14,560க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

