நகை வாங்குவோர் ஷாக்.. மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை..!!
சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு உயர்வால் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுகிற முதலீடுகளின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் நிரந்தர மற்றும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் விலை சர்வதேச அளவில் குறைந்திருக்கிறது.
இந்த தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார சிக்கல்கள், சுங்க வரி அதிகரிப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவீனம் போன்ற பல்வேறு காரணங்கள் தங்க விலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நமது நாட்டிலும் தங்கத்தின் விலையானது கணிசமாக குறைந்துள்ளது.
இருப்பினும், இந்த விலை சரிவானது நிரந்தரமில்லை என்றும், விரைவில் விலை மீண்டும் ஏற்றம் காணும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (ஜூன் 27) தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது

