நகை வாங்குவோர் ஷாக்..!! வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த தங்கம் விலை..!

 
Q Q

தங்கம் விலை இந்தாண்டாவது ஓரளவுக்குக் குறையும் என்ற நம்பிய பொதுமக்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கிறது. 

தங்கம் விலை நடுவில் சில நாட்கள் பெரியளவில் சரிந்த நிலையில், மீண்டும் அது விலை ஏற ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாகக் கடந்த பல நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்தே வருகிறது.

நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,170க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.5,000 அதிகரித்து ரூ.2,,92,000க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.292க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.