நகை வாங்குவோர் ஷாக்..!! தொடர்ந்து 4-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!!

 
Gold

சர்வதேச நிகழ்வுகளின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் ஒவ்வொரு நாளும் மாற்றம் அடைந்து வருகிறது. மேற்காசிய போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், கச்சா எண்ணெய்யின் மீதான மூதலீடு மற்றும் அமெரிக்கா டாலர் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களினால், படிப்படியாக குறைய தொடங்கியது.

கடந்த மாதம் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்த போடப்பட்ட நிலையில், மீண்டும் தங்கம் விலை உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பெரிய அளவிலான ஏற்றம் இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது.

இது தங்கத்தின் மீது எப்படி தாக்கம் ஏற்படுத்தும் என தெரியாத சூழலில் காலை, மாலை என இரு வேளையும் தங்கத்தின் விலை மாற்றம் கண்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

நேற்றைய வர்த்தகத்தில் ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,08,000-ஆக அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.

அதேவேளையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.