நகை வாங்குவோர் ஷாக்..!! மீண்டும் புது உச்சம் தொட்ட தங்கம் விலை..!!

 
Q Q
தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.
டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.
ஜனவரி 24ஆம் தேதியான இன்று புதிய வரலாறு உச்சத்தை எட்டியுள்ளது.
இன்று ரூ.560 உயர்ந்து, ரூ.116,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் நேற்று ரூ.14,550க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.355க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.