நகை வாங்குவோர் ஷாக்..!! தங்கம் விலையில் வரலாறு காணாத மாற்றம்..!!

 
Gold

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாத தொடக்கத்திலிருந்தே ஆபரண தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. இதற்கு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்படாததற்கு அமெரிக்காவின் வேலை வாய்ப்பு மந்த நிலை காரணமாக சொல்லப்படுகிறது.

எனினும், உலகின் பெரும்பாலான வர்த்தகங்கள் அமெரிக்க டாலரில் தான் நடைபெறுகின்றன. இதனால் டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றம் உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதங்களில் டாலர் மதிப்பு வலுப்பெற்று இருந்ததால் முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிற முதலீடுகளின் மீது கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது டாலர் மதிப்பு சற்று வலுவிழந்து வருவதால் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 20) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்து, ரூ.1,16,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது