நகை வாங்குவோர் ஷாக்..!! தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!!

 
Gold

தங்கம் விலை ஒரு நாள் குறைந்தால் அடுத்த இரண்டு நாட்களில் அதை விட அதிமாக ஏறிவிடும். கடந்த இரண்டு வருடங்களில் நகை விலை ஏற்ற, இறக்கம் இப்படி தான் இருந்தது. ஆனால் அமெரிக்கா - ஈரான் போருக்கு பிறகு அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் ரூ. 15 ஆயிரத்துக்கும் அதிகமாக தங்கம் விலை குறைந்திருக்கிறது.

 

இதற்கு காரணம் டாலர் மதிப்பு நல்ல நிலைமையில் இருப்பது தான். பொதுவாக டாலர் மதிப்பு சரியும் போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். அதுவே, டாலர் மதிப்பு கூடும்போது, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறும் நோக்கில், டாலர்களில் முதலீடு செய்வர். கடந்த சில மாதங்களாக போர் காரணத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டதால், தற்போது அதை ஈடுகட்டும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

 

அதனால், தங்கம் தவிர, பிற முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் முதலீட்டாளர்கள். இந்த நிலைமை சரியாகும் வரை தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பியிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

நேற்று (ஜூன் 25) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,140-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,30,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 26) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து, ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.

கடந்த 2 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.3,360 சரிந்தது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,220-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.105,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது