நகை வாங்குவோர் ஷாக்..!! ஒரே நாளில் ரூ.2400 உயர்ந்த தங்கம் விலை..!!

 
Gold

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் நகை வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதலடைந்திருந்தனர்.

அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக கடந்த வாரத்தில் தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை விறுவிறுவென ஏறியது. இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே குறையலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது சவரன் விலை ரூ. 1.10 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

நேற்று (ஆகஸ்ட் 10) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனையானது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

இன்று (ஆகஸட் 11) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.