நகை வாங்குவோர் ஷாக்..!! ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தையும், ஒரு பவுன் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170-ம், பவுனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது.
இந்தநிலையில் இன்றைய காலை நிலவரப்படி,
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து 12,770 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று ரூ.1,360 உயர்ந்த நிலையில் இன்று ரூ.1,600 உயர்ந்து விற்பனை ஆகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 3 ஆயிரம் உயர்ந்து ரூ.2.34 லட்சம் ஆக விற்பனை ஆகிறது.


