#Namakkal ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்.. நாமக்கல்லில் பரபரப்பு!

 
gold
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு ஆங்காங்கே கடுமையான வாகன சோதனைகளை தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நாமக்கல் அருகே மேட்டுப்பட்டி சோதனை சாவடியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நகைகளை எடுத்து வந்த மகாலிங்கம் என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.