நகை வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பு!இரண்டு நாட்களில் ₹2,800 குறைந்தது..!
தங்கத்தின் விலை நிலவரம் என்பது நாள் மற்றும் நேரத்திற்கு ஏற்ப, சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை காரணிகளைப் பொறுத்து தொடர்ந்து மாறக்கூடியது
தங்கம் விலை நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்து இருந்தது.
தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
15.11.2025 ஒரு சவரன் ரூ.92,400 (இன்று)
14.11.2025 ஒரு சவரன் ரூ.93,920 (நேற்று)
13.11.2025 ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600


