மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்! 5 நாளில் சவரனுக்கு ரூ.5,120 சரிந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கி இருக்கிறது. இதற்கு பங்குச்சந்தை ஏற்றம், டாலர் மதிப்பு, பண வீக்கம், அமெரிக்க - ஈரான் போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் விலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன. எனினும், தங்கத்தை முக்கிய முதலீடாகவும், சமூக அந்தஸ்த்தாகவும் கருதுகிற இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு இது உகந்த நேரம் என்கின்றனர் நிபுணர்கள்.
குறிப்பாக, தங்கத்தின் மீது முதலீடு செய்ய நினைப்போர், 916 ஹால்மார்க் முத்திரை கொண்ட 22 காரட் தங்கம் வாங்குவதை விட, 24 காரட் கணிக்கில் முதலீடு செய்யப்படுகிற ETF-இல் (Exchange-Traded Fund) முதலீடு செய்தால் இழப்பின்றி முதலீடு செய்யும் தொகையை அப்படியே ஈட்ட முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ஆனால், 22 காரட்டில் முதலீடு செய்தால், அதனை விற்கும்போது, விற்பனை நாளின் விலைக்கேற்ப செய்கூலி, சேதாரம் போன்றவை கழியும். இதனால் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க முடியாது என அறிவுரை வழங்குகின்றனர்.
நேற்று (நவம்பர் 13) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.195-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் ரூ.12,695-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,560-க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.12,615-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,00,920-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் ரூ.5,120 குறைந்துள்ளது.

