ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு..

 
தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.  

கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. அவ்வப்போது பெயரளவுக்கு ஓரிரு நாட்கள் குறைந்தாலும், கனிசமாக விலை உயர்ந்துள்ளது என்பதே நிதர்சனம். கடந்த ஆண்டு நவம்பர் , டிசம்பர் மாதங்களில் ரூ. 39,000 முதல் ரூ. 40,000 வரை விற்பனையான தங்கம் விலை , அண்மையில் ஒரு சவரன் ரூ.46,000 தொட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்து வருகிறது. அதன்பிறகு சற்று விலை குறைந்து வருகிறது.

தங்கம் விலை

தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் இருந்து வரும் நிலையில், இன்று ஆபரணத் தங்கம் விலை  அதிரடியாக குறைந்துள்ளது.  அதாவது சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்திருக்கிறது.   அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,670 ரூபாய்க்கும் , ஒரு சவரன் ரூ.45,360க்கும் விற்பனையாகிறது.  இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து  ஒரு கிராம் ரூ.78.20க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளிரூ. 78,200க்கு விற்கப்படுகிறது.