சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு!!
Sep 11, 2023, 10:36 IST1694408801996
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.கடந்த 8ஆம் தேதி சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி மீண்டும் தங்கத்தின் விலை குறைந்தது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5510 ரூபாயாக விற்பனையானது. சவரன் 160 குறைந்து ஒரு சவரன் 44 ஆயிரத்து 80 ரூபாயாக விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5,515க்கும், சவரன் ரூ.44,120க்கும் விற்பனையாகிறது.