₹54,000 ஐ கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை

 
gold

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. 

gold

சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.  கிட்டத்தட்ட ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 55 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது.   நேற்று முன்தினம்  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,730க்கு விற்பனையானது. இதன் மூலம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,840க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து,  இதன் மூலம் தங்கம் ஒரு கிராம் ரூ.6,710க்கு விற்பனையானது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,680க்கும் விற்பனையானது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54,040க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு  ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6755க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து,   கிராம் ரூ.88க்கும், ஒரு கிலோ ₹88,000க்கும் விற்பனையாகிறது.