விபத்துக்குள்ளான கார்... நூலிழையில் உயிர் தப்பிய ஜீவா!
கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவர் மனைவி உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து சேலம் நோக்கி நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் தனி காரில் சென்று கொண்டிருந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் புறவழிச்சாலையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது நடிகர் ஜீவா ஒட்டிச் சென்ற கார் மோதாமல் இருக்க முயன்ற போது நடிகர் ஜீவாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி எதிர் திசையில் சென்று நின்றது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில், அருகில் உள்ள தனியார் மெடிக்கலில் இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டனர்/ பின்னர் மாற்று கார் மூலமாக சேலத்திற்கு புறப்பட்டு சென்றனர். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.