"விரைவில் அரசியல் கட்சி தொடக்கம்... விஜய் விரும்பினால் கூட்டணி"
Dec 7, 2025, 13:21 IST1765093901960
ஊழலை ஒழிக்க விரும்பும் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசுவோம் என சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளர்.

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் பகுதியில், JCM மக்கள் மன்றத்தை திறந்து வைத்த சார்லஸ், 1000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின், “ஊழலை ஒழிக்க விரும்பும் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசுவோம். பழைய ஊழல் கட்சிகளை சுமக்க விருப்பமில்லை. தவெக தலைவர் விஜய் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைக்க தயார். விரைவில் அரசியல் கட்சி தொடங்கி பெயர், கொள்கையை அறிவிக்க உள்ளேன்” என்றார்.


