#BREAKING தவெகவில் ஜே.சி.டி.பிரபாகர்!

 
#BREAKING தவெகவில் ஜே.சி.டி.பிரபாகர்! #BREAKING தவெகவில் ஜே.சி.டி.பிரபாகர்!

சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர்.

Image


சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோருடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் செயல்பட்டுவந்தார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார்.

தவெகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.சி.டி. பிரபாகர், “எம்ஜிஆரை பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ அதேபோல் இன்று நான் விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டது. ஒரு அமைதி புரட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.வீட்டுக்கு வீடு வீதியெங்கும் விஜய் முழுக்கமாக உருவாகி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவையாக இருக்கிறது. அதற்காகவே விஜய் உடன் இணைந்து இருக்கிறேன்” என்றார்.