“எந்த துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

 
“எந்த துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

துண்டுச்சீட்டுக்கும், துண்டுக்கும் அடிபணிய மாட்டேன். எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
கூறியுள்லார்.

சட்டப்பேரவையில் செப்.07- ஆம் தேதி முதல்வர் தனது பதிலுரையில் தி.மு.க. மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வாய்ப்பு கேட்டபோது, பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் முதலில் வாய்ப்பு தருவதாக கூறினார். உதயநிதியை பேச அனுமதிக்கிறேன்னு சொல்லி முடிக்கவுமே, அவருக்கு அவரது உதவியாளர் மூலம் ஒரு துண்டுச்சீட்டு வந்ததாகவும், அதுல உதயநிதியை பேச அனுமதிக்க வேண்டாம்னு எழுதியிருந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. உடனே துண்டுச்சீட்டை பார்த்தவுடன் சபாநாயகர் பல்டி அடிச்சு, உதயநிதிய பேச அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டார். ஒரு துண்டுச் சீட்டு பேரவைத் தலைவர் கைக்கு வந்த பின்னர், வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார். ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க வேண்டிய பேரவைத் தலைவர் அவர்களே ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். என திமுக எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “துண்டுச்சீட்டுக்கும், துண்டுக்கும் அடிபணிய மாட்டேன். எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை.எந்த துண்டு சீட்டிற்கும் பயந்து அவையை நடத்துபவன் நான் அல்ல... நடுநிலையோடு அவையை நடத்தி உள்ளேன். முதலமைச்சர் பேரவையில் பேசுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடு்ட்டனர். அவையில் ஏற்பட்ட அமளி தொடர்பாகவும், சம்பந்தபட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவையை நடத்தினேன். ராஜினாமா செய்த 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான ராஜினாமா கடிதங்கள் பரிசீலனையில் உள்ளன” என்றார்.