“ஆளுநர் உரையின்போது இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது ஒன்று தவறு இல்லை"- ஜே.சி.டி.பிரபாகர்
ஆளுநர் உரையின்போது இருமுறை தேசிய கீதம் பாடப்பட்ட நடைமுறை வருங்காலத்தில் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என சபாநயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநயகர் ஜே.சி.டி.பிரபாகர், “ஆளுநர் உரையின்போது இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது ஒன்று தவறு இல்லை. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்வது நலமாக இருக்கும். குறுகிய கால கூட்டத்தொடர் என்பதால் கேள்வி பதில்களை அனுப்பி அந்தந்த துறைகளிடம் இருந்து பெற்றுத்தர கால தாமதம் ஏற்படும். எனவே 3 நாட்களுக்கு வினா- விடை இருக்காது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 3 நாட்களுக்கு விவாதம் நடந்த திட்டமிடபட்டுள்ளது. ஜூன் 19,22,23 ஆகிய நாட்களில் சட்டமன்றக் கூட்டம் நடத்த அலுவல் ஆய்வு குழு முடிவு செய்துள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு ஜூன் 23ல் பதிலளிக்கிறார் முதல்வர் விஜய்” என்றார்.

