அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்பு- சபாநாயகர் பிரபாகர்

 
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்பு- சபாநாயகர் பிரபாகர்

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டது. சட்டப்பேரவை விதிகளின்படி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்கள் ஏற்கட்டன. ராஜினாமா கடிதம் முறையாக இருந்தால் ஏற்பேன். முடிவை அறிவிக்குமாறு எனக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமாவுக்கு எதிரான இபிஎஸ் மனு குறித்து பிறகு விளக்கம் அளிக்கப்படும்.  எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதில் எனது முடிவே இறுதியானது. அதிமுகவினர் வாதங்களை பொருட்படுத்த தேவையில்லை. சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு நான் செயல்படுவேன்” என்றார்..