சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு..!

 
1

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (மே 12) நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர், சபாநாயகர் பதவிக்கும், துறையூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர், துணை சபாநாயகர் பதவிக்கும் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் வேறு எந்த கட்சியில் இருந்தும் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படாததால் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையா இன்று (மே 12) காலை சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.