இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் உடையலாம் - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

 
jayakumar

இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் உடையலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 
 
சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிம் அதிமுக கூட்டணி குறித்தும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதான எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், விரைவில் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம். தூக்கத்தில்  எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை என கூறினார். 

மேலும் இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், வடக்கில் இந்தியா கூட்டணிக்கு  ஏற்பட்ட நிலைமைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் உடையலாம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே கொள்கையில் ஊறியவர்கள் இல்லை. பல முரண்பாடுகள் உள்ளன. ஆகவே இந்தியா கூட்டணி போலவே திமுக கூட்டணியும் உடையும் என கூறினார்.