ஜெயலலிதா நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு

 
ஜெயலலிதா..

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க வெள்ளி வைரம் நகைகளை வரும் பிப்ரவரி 14 மற்றும் 15ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச் வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!  - லங்காசிறி நியூஸ்

ஜெயலலிதா சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம் வெள்ளி வைரம் நகைகளையும் 1562 ஏக்கர் நிலங்களில் பத்திரங்களையும் வரும் பிப்ரவரி 14 மற்றும் 15ஆம் தேதி தமிழாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச் வி மோகன் உத்தரவு பிறப்பித்தார். வரும் 14 மற்றும் 15ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு ஆறு பெட்டிகளுடன் வர வேண்டும் என்றும் அதற்கான உரிய வாகன வசதி பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து நீதிமன்றத்திற்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று எடுத்து செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பாதுகாப்புக்கு காவல்துறை உடன் வரவேண்டும் என்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருட்களை எடுத்துச் செல்லும் போது அவற்றை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் வரவேண்டும் என்றும் ஒட்டுமொத்த நடைமுறையையும் படம்பிடிக்க ஒளிப்பதிவாளர்கள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகா அரசு உரிய பாதுகாப்புடன் அரசு கருவூலத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் உரிய பாதுகாப்புடன் 14ஆம் தேதி நீதிமன்றத்திற்கு எடுத்து வர அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஜெயலலிதா வீட்டை சோதனை செய்து இந்த பொருட்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2004 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.