ஜெயலலிதாவின் நகைகள், ஆவணங்கள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைப்பு!

 
jeyalalitha

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் நில ஆவணங்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில்,  ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் நில ஆவணங்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா நீதிமன்ற கருவூலத்தில் உள்ள சொத்துகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் தங்கம், வைர நகைகள் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டன. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.