காவலருக்கு கொலை மிரட்டல்- ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் கைது

 
தனபால்

சேலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை தரக் குறைவாக பேசி, சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் கைது செய்தனர். 

கொடநாடு வழக்கு; இரண்டாவது முறையாக ஆஜரான தனபால் | nakkheeran

சேலம் மாவட்டம் தாரமங்கலம்  காவல் நிலையத்தில் பணிபுரியும்  காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை , மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பழனிச்சாமி, மூர்த்தி , அரிசியப்பன் ஆகியோர் நேற்று மாலை 5 மணி அளவில் தாரமங்கலம் - நங்கவள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது எடப்பாடி அடுத்துள்ள சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த மறைந்த கனகராஜின் அண்ணன் தனபால்  அவ்வழியே வந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை  பார்த்து வாக்கு வாதம் செய்தவர், என் மீது மேச்சேரி காவல் நிலையத்தில் பொய் வழக்கு போட  நீயும் உடந்தையாக இருந்தாய் என சாலையிலேயே  தரக்குறைவாக பேசியதோடு, அவரது சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.  

இதனைக் கண்ட மற்ற போலீசார் தனபாலை தடுத்த போது அவர், காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரையை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து  தனப்பாலை  பிடித்து, காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார், காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை  கொடுத்த புகாரின் பேரில் தனபாலை கைது செய்தனர். பின்னர் தனபால் மீது பொது இடத்தில் தரக்குறைவாக பேசியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தது போன்ற நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பின்னர் சிறையில் அடைத்தனர். கைதான தனபால், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் கார் ஓட்டுநரான கனகராஜின்  அண்ணன் ஆவார். மேலும் கோடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக பழனிசாமி அவர்களிடம்  விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கொடநாடு வழக்கு : '50 பேர் கொண்ட பட்டியல் ரெடி' - தனபால் அதிரடி – News18  தமிழ்

அப்போது கோடநாடு கொள்ளை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார், தனபால் வீட்டில் சோதனை மேற்கொண்டு, தனபால் வீட்டில் இருந்து அவரது  செல்போனை கைப்பற்றினர். மேலும் கனகராஜின் செல்போன் மற்றும் சிம்கார்டுகளை  உடைத்தெறிந்தோடு, அதனை எரித்துள்ளார். இதனால் ஆவணங்களை அழித்ததாக கொடநாடு சிறப்பு விசாரணை போலீசார் தனபாலை, அப்போது  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தற்போது தனபால் ஜாமினில் உள்ளார்.  இந்த நிலையில் மேச்சேரி அருகே நில மோசடி வழக்கு ஒன்றில் தனபால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தாரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை , மேச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது தன் மீது பொய் வழக்கு  போட்டு சிறைச்செல்ல காரணமாக இருந்தவர் எனக் கூறி , அழகுதுரையை தரக்குறைவாக பேசி,  அவரை கீழே தள்ளி கொலைமிரட்டல் விடுத்தது  தொடர்பாக தனபாலை போலீசார் கைது செய்துள்ளனர்.