அவதூறு பரப்புவதில் பல அவார்டுகள் வாங்கி வைத்துள்ள இயக்கம் திமுக- ஜெயக்குமார்

 
jayakumar

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு‌ச்‌ செயலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி , தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்   தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு‌ச்‌ செயலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்! அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான்!


சாட்டை சேனலில் திமுக அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காகவும் மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காகவும் தமிழ்நாட்டை சூறையாடி தின்று கொழுத்த திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திறனற்ற திமுக அரசு! பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஸ்டாலின், அவருடைய ஆட்சிக்கான முடிவுரையே அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.