எம்.ஜி.ஆர் உடன் மோடியை ஒப்பிடலாமா ? - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி

 
jayakumar jayakumar

எந்த நிலையிலும் எம்ஜிஆர் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எ.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

எம்.ஜ்.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: எம்ஜிஆரை பொறுத்த அளவில் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் சாதி, சமய வேறுபாடுகளை பார்த்ததில்லை. அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். எல்லோரும் போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆர் உடன் மோடியை ஒப்பிடலாமா ? சாதி,மதம், இனத்தை கடந்து சமத்துவம் பார்க்கும் இயக்கம் அதிமுக. எந்த நிலையிலும் எம்ஜிஆர் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது
 என கூறினார்.