அமைச்சர் பொன்முடி வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ள கோரி ஜெயக்குமார் மனு

 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

jayakumar

2006 - 2011 ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது  மகன் கெளதம் சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும்,இதன் மூலம்  அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பொன்முடி, அவரது மனகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.  சோதனையில் ரூ.81.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தனனி இணைத்துக்கொள்ளவேண்டும் என விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். அதில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்.