தலித் மக்கள் சந்திக்கும் வேதனைகளுக்கு தத்தி அரசின் பதில் என்ன? - ஜெயக்குமார் கேள்வி!

 
jayakumar

இன்னும் எத்தனை சாதிய கொடுமைகளை எத்தனை வடிவங்களில் தமிழ்நாடு சந்திக்க போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் எத்தனை சாதிய கொடுமைகளை எத்தனை வடிவங்களில் தமிழ்நாடு சந்திக்க போகிறது? சில தலித் இயக்கங்கள் நம்மோடு இருக்க நாம் ஏன் தலித் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் என எண்ணி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாரா உதவாக்கரை முதலமைச்சர்?

தலித் மக்கள் மீதான தாக்குதல்களின் போதெல்லாம்,தன் கூட்டணி கட்சிகளின் வாய்களை கட்டுபடுத்துவதற்கு மட்டுமே முழு முயற்சி எடுக்கிறார் சங்பரிவார் ஸ்டாலின். இப்படி தொடர்ந்து தலித் மக்கள் சந்திக்கும் வேதனைகளுக்கு தத்தி அரசின் பதில் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.