முன்னறிவிப்பும், முன்னேற்பாடும் இல்லாத முட்டாள் அரசு - ஜெயக்குமார் கடும் விமர்சனம்

 
jayakumar

கருணாநிதி பெயரில் கட்சி சின்ன வடிவில் பேருந்து நிலையம் கட்டினால் போதாது, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் சேகர் பாபு வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக ஜெயக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொடர் விடுமுறையால் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் பேருந்துகள் முன்பதிவு செய்து கோயம்பேடு வந்தடைந்துள்ள வேளையில் காவல்துறையை வைத்து பேருந்துகள் உள்ளே-வெளியே செல்ல இயலாத வகையில் தடுப்புகளை அமைத்துள்ளனர். முன்பதிவு செய்து பேருந்து நிலையம் வந்த பயணிகளை 'உள்ளே போகாதீர்கள். பேருந்து இங்கிருந்து இயங்காது. ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கிளாம்பாக்கம் செல்லுங்கள்'..என மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி மிரட்டி வருகின்றனர்.


இந்த அரசு மக்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கருணாநிதி பெயரில் 
கட்சி சின்ன வடிவில் பேருந்து நிலையம் கட்டினால் போதாது. அடிப்படை வசதிகள் வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை. திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை இன்னும் பிடிக்க முடியவில்லை. அப்பாவி மக்களையும் ஆம்னி‌ பேருந்து உரிமையாளர்களையும் மிரட்ட 500 போலிஸ் குவிப்பு. முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இல்லாத முட்டாள் அரசு என குறிப்பிட்டுள்ளார்.