குமரி ஆனந்தன் அரசியலையும் இலக்கியத்தையும் இரு கண்களாகப் பாவித்தவர்- ஜவாஹிருல்லா

 
 ஜவாஹிருல்லா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் நலக் குறைவால் மறைந்தார்என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

காங். மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ அறிவிப்பு..

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் நலக் குறைவால் மறைந்தார்என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவராகப்  பதவி வகித்தவர். இலக்கியச் செல்வர் எனஅனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்நாடு அரசு குமரி அனந்தனுக்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு தகைசால் விருதை வழங்கி கவுரவித்து இருந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 5 முறை சட்டமன்றஉறுப்பினராகவும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் சிறப்புறப் பணி செய்தவர்.

அரசியலையும் இலக்கியத்தையும் இரு கண்களாகப் பாவித்தவர். ஆகச் சிறந்த சமூகநல்லிணக்க செயல்பாட்டாளராகத் திகழ்ந்தவர். அவரது மேடைப் பேச்சுகளில் தமிழ்த்தென்றல் வீசும். இளம் வயதில் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் காங்கிரஸ் கட்சிதொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.