இதுக்கூட அறியாத ஒருவர் பத்தாண்டு பிரதமராக இருந்தது சாபக்கேடு- ஜவாஹிருல்லா

 
jawahirullah

கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்திருக்கிறார் என்று உலகத்தின் பலருக்கு தெரிந்திருப்பதாக பிரதமர் மோடி கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றனர்.

modi

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா, “உலக புகழ்பெற்ற டைம் ஆங்கில வார இதழின் ஜனவரி 5, 1931 அட்டைப்படம் இது. 1930ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் காந்தியடிகள் என்று டைம் தேர்ந்தெடுத்திருந்தது. எனவே அட்டை படத்தில் காந்தியடிகளின் படத்தைப் பதிப்பித்துச் சிறப்புச் செய்தது.


அட்டன்பரோ காந்தி படம் எடுப்பதற்கு முன்பே உலகம் அறிந்த தலைவர் காந்தியடிகள். இந்த உண்மையை அறியாத ஒருவர் காந்திய தேசத்தின் பிரதமராக பத்தாண்டு இருந்தது சாபக்கேடு. Good Bye Modiji” எனக் குறிப்பிட்டுள்ளார்.