அப்பா செஞ்சது ஒரு வரலாற்று புரட்சி - சிலாகித்து பேசிய ஜேசன் சஞ்சய்

 
d

எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். சிக்மா படத்தில் அவர் பாடியிருக்கிறார். என்னை மாதிரி எத்தனையோ அறிமுக இயக்குநர்களுக்கு அவர்வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.

ജേസൺ സഞ്ജയ് ആദ്യ സംവിധാന സംരംഭമായ 'സിഗ്മ'യെക്കുറിച്ചും അച്ഛൻ  വിജയ്‌യെക്കുറിച്ചും സംസാരിക്കുന്നു | Jason Sanjay Discusses Directorial  Debut Sigma and Relationship with ...

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய முதல்வர் விஜயின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், “நான் எனக்கென்று ஒரு தனி அடையாளத்தையும், தனி பெயரையும் உருவாக்க வேண்டும் என்று அப்பா எனக்கு அறிவுரை கூறினார். நானும் அதே எண்ணத்தில் தான் இருந்தேன். எங்கள் இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்தது. உனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை அணுகலாம். ஆனால், நீயே முன்வந்து முயற்சி செய்ய வேண்டும். நான் வந்து கேட்க மாட்டேன் என்று அப்பா கூறினார். வாழ்க்கையில் வரும் அனுபவங்களை நீயே சந்தித்து அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. எனக்கு எப்போதும் துணையாக இருந்த அப்பா, அம்மா மற்றும் என் குடும்பத்தினருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். சிக்மா படத்தில் அவர் பாடியிருக்கிறார். என்னை மாதிரி எத்தனையோ அறிமுக இயக்குநர்களுக்கு அவர்வாழ்க்கை கொடுத்திருக்கிறார். 

என் படம் மற்றும் குடும்பம் குறித்து இணையத்தில் வரும் கமெண்ட்களை நான் படிப்பேன், அதில் நல்ல கருத்துகளை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.தனது குடும்பத்திற்காக மக்கள் காட்டும் அளப்பரிய அன்பைக் கண்டு நான் மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன். அப்பா முதலைமைச்சர் ஆனது வரலாற்று புரட்சி, இது எனக்கும் சரி, எங்க தங்கச்சிக்கு சரி, குடும்பத்தில் சம்மந்தப்பட்ட அனைவருக்குமே ஒரு கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தி இருக்கு, அந்த பெருமையை நான் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஜாக்கிரதையா இருக்கேன். வேட்டைக்காரன் படத்தில் நான் ஆடிய நடனத்தை இப்போது பார்த்தால், நாமா இதையெல்லாம் செய்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு 9 வயதுதான் இருக்கும். அப்போதே அடிக்கடி ஷூட்டிங் சென்றிருக்கிறேன். அந்த ஆர்வத்தோடு வேட்டைக்காரன் படத்தின் பாடலில் வருவதற்கும் ஓகே சொல்லியிருப்பேன். அங்கே போன பிறகு ஷோபி மாஸ்டர் வந்தார். நான் ஆர்வமாக போய்விட்டாலும் அங்கே இருந்த கூட்டத்தை பார்த்து பயந்துபோய் அப்பாவை தேடி போய் கட்டிப்பிடித்துக்கொண்டேன். பிறகு எப்படியோ நடித்துவிட்டேன்” என்றார்.