ஜூலை 23-ல் ஜனநாயகன் ரிலீஸ்?
ஜனநாயகன் படத்தின் Final Cut List-ஐ CBFC படக்குழுவிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கம் (Cuts) மற்றும் வசனங்களை மியூட் (Mutes) செய்வது தொடர்பான பட்டியலை தணிக்கைக் குழு (CBFC) அதிகாரிகள் படக்குழுவிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்து, சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே இறுதி Cuts & Mutes பட்டியல் CBFC இணையதளத்தில் பதிவேற்றப்படும். இந்த வாரத்திலேயே Censor Certificate கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேவையான மாற்றங்களை செய்துவரும் படக்குழு, 'ஜனநாயகன்' திரைப்படத்தை வரும் 23 ஆம் தேதி ரிலீஸ் செய்ய மும்முரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக புதிய Title Card மற்றும் புதிதாக Trailer ஒன்றும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

