டிக்கெட் முன்பதிவில் ’ஜனநாயகன்’ புதிய சாதனை

 
ஜனநாயகன்

டிக்கெட் முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

jananayagan

எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 9ஆம் தேதி திட்டமிட்டிருந்த ரிலீஸ் தேதி, தணிக்கை சான்று பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல் கொண்டாட தவெக தலைமை உத்தரவிட்டிருந்தது. படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விரைவாக விற்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாகும் நாளுக்கான டிக்கெட்டுகள் ரூ.10 கோடி அளவுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ். படம் ரிலீசாக உள்ள அன்றைய நாளுக்கான டிக்கெட்டுகள் ரூ.10.17 கோடி அளவுக்கு இந்தியாவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.