#BREAKING ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

 
jananayagan

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

Image

எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 9ஆம் தேதி திட்டமிட்டிருந்த ரிலீஸ் தேதி, தணிக்கை சான்று பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல் கொண்டாட தவெக தலைமை உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விரைவாக விற்று கூறப்படுகிறது.