ஜனநாயகன் - காலை 7 மணிக்கு ரிலீஸ்
புதுச்சேரியில் காலை 7 மணிக்கு ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 9ஆம் தேதி திட்டமிட்டிருந்த ரிலீஸ் தேதி, தணிக்கை சான்று பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல் கொண்டாட தவெக தலைமை உத்தரவிட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட்டுகள் ரூ.10 கோடி அளவுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 13 திரையரங்குகளிலும் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகிறது.

