2 வாரத்தில்... ஜனநாயகன் வெளியீடு- தயாரிப்பாளர் பேட்டி
ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுவது குறித்து 2 வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் என அதன் தயாரிப்பாளர் பேட்டியளித்துள்ளார்.

தமிழ் கடவுள் ஆன முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகவும் சிறந்த பரிகார தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தாலும், தங்களது படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் திருச்செந்தூர் முருகனை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் தமிழக முதல்வரும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி கேவிஎன் ப்ரொடக்ஷனில் உரிமையாளரும் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளருமான வெங்கட் கே நாராயணன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி உள்பட அனைத்து பரிவார தேவதையும் தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து சத்ருசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை வழிபாடு செய்தார். சுமார் அரை மணிநேரத்திற்கும் மேல் இந்த பூஜையில் அவர் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகி வெற்றியடைய வேண்டி இன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரைப்படம் வெளியாவது குறித்து 2 வார காலத்திற்குள் முடிவு செய்யப்படும். மேலும் திரைப்படத்தில் தளபதி விஜயா அல்லது முதல்வர் விஜயா என்று பெயர் வைப்பது குறித்து முதல்வர் விஜய் முடிவு செய்து கூறிய பிறகு அது குறித்த முடிவு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

