ஜனநாயகன் படக்குழு சைபர் கிரைமில் புகார்!
ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைமில் படக்குழு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
/polimer-news/media/media_files/2026/04/10/5-2026-04-10-11-17-31.jpg)
ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைமில் படக்குழு தரப்பில் புகார் அளித்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் மட்டுமே முதலில் கசிந்த நிலையில், நேற்று இரவு முழு படத்தையும் சட்டவிரோதமாக சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர். முதலில் ஓரிரு காட்சிகள் மட்டும் வெளியான நிலையில், இரவு முழு திரைப்படமும் வெளியானது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் ஜனநாயகன் காட்சிகளையும் படத்தையும் பகிர்வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பொது அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது படக்குழு தரப்பில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் சமூக வலைத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியான நிலையில் இதுகுறித்து கருத்துக்கூறியுள்ள திருப்பூர் சுப்ரமணியன், காலையில எழுந்து பார்த்ததுமே பேரதிர்ச்சி. இது தமிழ் சினிமாவுக்கே பெரிய இழப்பு. இந்த வருஷத்துல நாங்க எதிர்பார்த்த பெரிய படமே இது தான் என்றார்.



