ஜல்லிக்கட்டு: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - செல்வப்பெருந்தகை..

 
 செல்வபெருந்தகை!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க  முடியாது என்று 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கியதை வரவேற்கின்றேன். உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்று கடுமையாக முயற்சி செய்த பீட்டா நிறுவனத்தின் வாதத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக பார்க்கின்றேன்.

ஜல்லிக்கட்டு

தமிழ்நாடு அரசின் சிறப்பான வாதம் நீதிபதிகளை கவர்ந்தது என்று சொல்லியுள்ளனர். மானமும், வீரமும் மறத்தமிழனின் அடையாளமாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜல்லிக்கட்டுக்கு என்று தனியிடம் உண்டு. அது நமது பண்பாட்டுடன் கலந்த ஒன்றாகும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த தமிழ்நாடு அரசுக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.