ஜல்லிக்கட்டு - இணையதளத்தில் பதிவு தொடக்கம்

 
jalli

தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான்.   பொங்கல் திருநாளில் இருந்தே  தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது.

jalli

ஆண்டுதோறும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு,  அவினியாபுரம் ஆகிய இடங்களில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

jalli

இந்நிலையில் மதுரை தொட்டப்பநாயக்கனூரில் வரும் 12ல் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு இன்று பதிவு தொடங்குகிறது. இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை காளைகளை பதிவு செய்யலாம்; ஜல்லிக்கட்டில் பங்கேற்க https://madurai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.