தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி : தச்சங்குறிச்சியில் தொடங்கியது!!

 
jalli

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம்  தச்சங்குறிச்சியில் தொடங்கியுள்ளது.

jalli
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் போட்டி நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.அதன்படி இணையதள முன்பதிவு ஆனது கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது இதில் 4534 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். 

jalli

இந்நிலையில் புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து போட்டியில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்கின்றன.