உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலி

 
உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை தாக்கி உரிமையாளர் பலி

திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 

Image

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இந்த வருடம் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு இன்று கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, முசிறி, திண்டுக்கல் உட்பட பல ஊர்களில் இருந்து 762 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.  முன்னதாக திண்டுக்கல் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர் பின்னர் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 16  சுற்றுகள் நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள்7, மாட்டு உரிமை யாளர்கள் 8, காவலர் 1, பார்வையாளர்கள் 4 பேர் என 20 பேர் படுகாயம் அடைந்தனர். 

காளை முட்டியதில் காமாட்சிபுரத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் செபஸ்தியார் என்பவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த 10 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.