நிறைவடைந்தது ஜெயிலர் 2- கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி முதல் நாளிலேயே ரூ.33 கோடி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெய்லர் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் , தமன்னா, யோகி பாபு, விநாயகன், விடிவி கணேஷ், லெடின் கிங்ஸ்லி, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜெயிலர் 2- படத்தில் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஜெயிலர் 2 படத்தை அடுத்து,‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

